CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

செஞ்சோலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்வும் நினைவுத்தூபி திறப்பும்..!

செஞ்சோலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்வும் நினைவுத்தூபி திறப்பும்..!

செஞ்சோலை சிறுவர் முகாம் மீதான தாக்குதலில் உயிரிழந்த, பாடசாலை மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் இன்று இடம்பெற்றது.

இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த தந்தை ஒருவர் இந்த நிகழ்வில் பொதுச் சுடரை ஏற்றி வைத்தார்.

அதைத் தொடர்ந்து இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பொதுச் சுடர் ஏற்றி வைத்ததுடன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  சிவப்பிரகாசம் சிவமோகன் மலர்மாலை அணிவித்தார்.

இதன் பின்னர் உயிரிழந்த உறவுகளுக்கான சுடர்கள் அவர்களின் உறவுகளால் ஏற்றப்பட்டு, திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

உயிரிழந்த மாணவர்களின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியும் இதன்போது திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில்  உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

capitalnews.lk

capitalnews.lk

முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்