CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

மடு  தேவாலயத்தின் உற்சவத்தை முன்னிட்டு  விசேட ரயில் சேவைகள்...!

மடு தேவாலயத்தின் உற்சவத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்...!

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் மடு  தேவாலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு நீர்கொழும்பு ரயில் நிலையத்திலிருந்து விசேட ரயில் சேவைகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இன்று காலை 7.30 முதல் கட்டுநாயக்க, சீதுவை, ஜா-எல, றாகம, கம்பஹா, வெயாங்கொட, குருநாகல் ஆகிய  ரயில்  நிலையங்கள் ஊடாக  இந்த விசேட சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய   பயணித்துள்ள விசேட ரயில் இன்று பிற்பகல்  3 மணியளவில்  மன்னார் மடு ரயில் நிலையத்தை சென்றடையவுள்ளது.

மடு ரயில் நிலையத்திலிருந்து நாளை  மாலை 4.30 அளவில் பயணத்தை  ஆரம்பித்து மறுநாள் அதிகாலை 12.30 அளவில் நீர்கொழும்பு ரயில் நிலையத்தை விசேட ரயில் வந்தடையும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மடு  தேவாலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி  நாளை காலை 6.15 அளவில் ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது.

மடு தேவாலயத்தின் வருடாந்த திருவிழா 6 ஆம் திகதி கொடியேற்றத்ததுடன் ஆரம்பமாகியது.

இந்த நிலையில் மடு தேவாலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு முப்படையினரின் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.



முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்