அரசாங்கம் புலம்பெயர்ந்த மக்களிடம் பணம் அறவிடுகிறது- அனந்தி சசிதரன் ..!(AUDIO)
- By Capital News --
- 14 Aug 2019
- 78
போட்டிமிக்க சந்தையில் அரச நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்திகளை விற்பனை செய்து அதனூடாக இலாபமீட்ட முன்வர வேண்டும் என தேசிய கொள்கைகள் புனர்வாழ்வு, மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளரான ஞா.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
குருநகர் வடகடல் நிறுவனத்தின் தலைவர் தி. பரமேஸ்வரன் தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் பொதுமக்களின் அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட நிதியினை நிறுவனங்களுக்கு வழங்குவது நியாயமற்றது எனவும் ஞா சிவஞானஜோதி எமது கெப்பிட்டல் நியூசுக்கு கூறினார்.
தமக்கு கீழுள்ள நிறுவனங்களை அபிவிருத்தி செய்ய முடியாமல் மக்களின் அபிவிருத்திக்கான நிதியினை கோருவது செயற்திறனற்ற செயற்பாடாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை போரினால் பாதிக்கப்பட்டவர்களை காட்டி அரசாங்கம் புலம்பெயர்ந்த மக்களிடம் பணம் அறவிடுவதாக வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.