இந்திய பெருங்கடலில் இலங்கை வர்த்தக மையமாக மாற்றப்படும்
- By Capital News --
- 14 Aug 2019
- 72
ஹம்பாந்தோட்டை துறைமுகம் இந்தியப் பெருங்கடலின் முக்கிய துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்ட நடவடிக்கைகளாக துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருளாதார வளயங்களை உருவாக்குதல் கைத்தொழில் பேட்டைகளை அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
உற்பத்தி செயன்முறைகளை மேம்படுத்தி இந்திய பெருங்கடலில் இலங்கையை முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார மையமாக மாற்றுவதே தமது நோக்கம் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடல்சார் பொருளாதாரத்தை வலுப்படுத்தி இந்தியப் பெருங்கடலில் இலங்கையை முக்கிய வர்த்தக மையமாக மாற்றுவதே நோக்கமெனவும் குறிப்பிட்டுள்ளார்.