CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு நடவடிக்கைகளை புறக்கணிக்கபோவதாக அறிவிப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு நடவடிக்கைகளை புறக்கணிக்கபோவதாக அறிவிப்பு

மாணவர்களின் நலன் சார்ந்து மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்  நாளைய தினம், வகுப்பு நடவடிக்கைகளை  புறக்கணிக்கப்போவதாக   தெரிவித்துள்ளனர்.

துணைவேந்தர் ஒருவர் இல்லாத நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய தலைமை நிர்வாகியான தகுதி வாய்ந்த அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரிக்கு அந்தக் கடிதம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  மூன்று மாத காலத்துக்கு மேலாக வெளியிடப்படாமல் உள்ள  பரீட்சை முடிவுகளை வெளியிட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள மாணவர்கள், இதன் காரணமாகவே  கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்கவுள்ளதாகவும்  கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்