வவுனியா செட்டிக்குளம் பகுதியில் ஒருவர் சடலமாக மீட்பு
- By Capital News --
- 14 Aug 2019
- 73
வவுனியா செட்டிக்குளம் அரசடிக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது
செட்டிக்குளம் அரசடிக்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே,சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சடலமாக கண்டெடுக்கப்பட்ட குறித்த நபரை, வீட்டில் காணவில்லை என மனைவி தெரிவித்ததையடுத்து, பிரதேச மக்களின் உதவியோடு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது
50 மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு,செட்டிக்களம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்