அமெரிக்காவுக்கான எயார் இந்தியா விமான சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
- By Capital News --
- 14 Aug 2019
- 85
கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கான தமுது சேவையை விரிவுபடுத்தவுள்ளதாக எயார் இந்தியா விமான சேவை தெரிவித்துள்ளது.
முதன்முறையாக புது டெல்லி முதல் சென் பிரான்சிஸ்கோ வரை பயணிக்க உள்ள எயார் இந்தியா விமானம் வடதுருவம் ஊடாக பயணிக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த மாத இறுதியில் குறித்த விமான சேவை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் புது டெல்லியிலிருந்து பங்களாதேஷ், மியான்மார், சீனா மற்றும் ஜப்பான் வழியாக பசுபிக் பெருங்கடலைக் கடந்து சுமார் 17 மணித்தியாலங்களில் எயார் இந்தியா விமானம் அமெரிக்காவை சென்றடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வடதுருவம் ஊடான பயணத்தின் போது புது டெல்லியிலிருந்து கிரிகிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, ஆர்டிக் பெருங்கடல், கனடா வழியாக அமெரிக்காவை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.