CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் வகுப்புப் புறக்கணிப்பு தொடர்கிறது (Video)

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் வகுப்புப் புறக்கணிப்பு தொடர்கிறது (Video)

மாணவர்களின் நலன் சார்ந்து மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று தமது கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணித்துள்ளனர். 

யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினால் கடந்த 13ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக் கழக தகுதி வாய்ந்த அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் மூலம் இந்த விடயங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ் பல்கலைக் கழகத்தில் வேந்தர் நியமனம் செய்யப்படாமை காரணமாக, பட்டக் கல்வியை நிறைவு செய்த பல மாணவர்களுக்கு இது வரை பட்டமளிப்பு நடாத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

இந்த நிலையில், உடனடியாக வேந்தர் நியமனத்தை விரைவாக நடாத்துவதன் மூலம் பட்டமளிப்பு விழாவை நடாத்த வேண்டும்  எனவும் மூன்று மாத காலத்துக்கு மேலாக வெளியிடப்படாமலிருக்கும் பரீட்சை முடிவுகளை வெளியிட வேண்டும் எனவும் கோரி  பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி புறக்கணிப்பு நடவடிக்கை இன்று இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்