CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

capitalnews capitalnews.lk Gotabaya Rajapaksa
   
SLPP 6,924,255 53.37 %
capitalnews capitalnews.lk Sajith Premadasa
   
NDF 5,564,239 42.88 %
capitalnews capitalnews.lk Anura Kumara Dissanayaka
   
NMPP 418,553 3.23 %
    # Vanni   District > Mannar   Polling Division > NDF - 53,602 - 84.73% | SLPP - 6,435 - 10.17% | DUNF - 695 - 1.17% |     # Jaffna   District > Chavakachcheri   Polling Division > NDF - 28,007 - 84.75% | SLPP - 1,775 - 5.37% | DUNF - 656 - 1.99% |     # Batticaloa   District > Padiruppu   Polling Division > NDF - 54,132 - 83.05% | SLPP - 7,948 - 12.19% | DUNF - 767 - 1.18% |     # Colombo   District > Kotte   Polling Division > SLPP - 31,853 - 54.56% | NDF - 22,628 - 38.76% | NMPP - 2,439 - 4.18% |     # Kegalle   District > Ruwanwella   Polling Division > SLPP - 35,714 - 56.71% | NDF - 24,604 - 39.07% | NMPP - 1,403 - 2.23% |
Huawei தொழிநுட்பத்தில் புதிய அம்சங்கள் அறிமுகம்

Huawei தொழிநுட்பத்தில் புதிய அம்சங்கள் அறிமுகம்

Huawei Developer மாநாடானது (HDC டொங்க்வான் நகரிலுள்ள அந்நிறுவனத்தின் சொங்ஷான் ஏரி தலைமையகத்தில் அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றது. "Rethink Possibilities" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு ஆகஸ்ட் 9 முதல் 11 வரை தொடர்ச்சியாக 03 நாட்களாக இடம்பெற்ற இந்த மாநாட்டில், Huawei இன் 600 க்கும் அதிகமான தொழில்துறை வல்லுனர்கள் உலகெங்கிலுமுள்ள 6000 க்கும் அதிகமான மேம்பாட்டாளர்கள் மற்றும் பங்காளர்களுடன் இணைந்து பரந்துபட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் உலகளாவிய வடிவமைப்புத் துறையிலான சமகால விடயங்களை கலந்தாராய்ந்தனர். 

இந்த மாநாட்டில், அனைத்து சந்தர்ப்பங்களுக்குமான அறிவாற்றலை அடிப்படையாகக் கொண்ட, அடுத்த தலைமுறைக்கு இணையற்ற அனுபவத்தினை வழங்கும் ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. ஆகஸ்ட் 10 இடம்பெற்ற உலகளாவிய நிகழ்வில் Taboola News பிரதிநிதிகள் Huawei உடனான அவர்களது கூட்டு நடவடிக்கைகளை விபரித்தனர். Huawei மற்றும் Taboola News தமது கூட்டு நடவடிக்கைகளை 2019 ஜனவரி மாதம் ஆரம்பித்ததுடன், அதன் முதற்கட்டமாக தாய்லாந்தில் APAC பிராந்தியத்திற்கான சேவைகளை ஆரம்பித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

Taboola News தமது பங்காளர்களின் நம்பகரமான செய்தி மூலங்களில் இருந்து விபரங்களைச் சேகரித்து Huawei பயனாளர்களுக்கு உள்ளூர் மொழிகளில் செய்திகளை வழங்கிவருகின்றனர். தாய்லாந்திலுள்ள HUAWEI உதவியாளருடன் இணைந்து எளிமையான முறையில், உள்ளூர் செய்திகளை சரியான நேரத்தில் பயனாளர்களுக்கு வழங்குவதன் வாயிலாக, Taboola News அதன் சேவைகளைத் திறம்பட மேற்கொண்டுவருவதாக Huawei குறிப்பிடுகிறது. இதன் காரணமாக, தாய்லாந்தில் HUAWEI உதவியாளரினை நாளாந்தம் உபயோகிக்கும் பயனாளர்களின் (DAU) எண்ணிக்கையானது Taboola News உடனான கூட்டு செய்திச் சேவைக்கு முன்னரான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2019 மே மாதமளவில் 120% இனால் அதிகரித்துள்ளது. 

“Hello Kitty மற்றும் HUAWEI தீம்களுக்கு இடையிலான கூட்டு நடவடிக்கைகள்”, என்ற பிறிதொரு தலைப்பில் உரையாற்றிய IID Inc. இன் வணிக இயக்குனர் ஹிசாயோஷி காட்டோ, Huawei உடன் கூட்டாக இணைந்து அறிவுசார் சொத்துக்களை (IP) உருவாக்கியது தொடர்பான தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். Huawei உடனான IID பங்களிப்பானது, ஜப்பான் மற்றும் சீனாவிலுள்ள HUAWEI தீம் ஸ்டோருக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட Hello Kitty மொபைல் தீம்களையும் உள்ளடக்குகிறது.

காட்டோ தொடர்ந்து உரையாற்றுகையில், ஜப்பானிய நிறுவனங்கள் வியாபாரப் பங்காளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது தயாரிப்பு தரம், காப்புரிமை மற்றும் வருவாய் பங்கீடு மாதிரி தொடர்பான விடயங்களில் அதிக கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்டார். “HUAWEI தீம்கள் வாயிலாக சீனாவில் மட்டுமல்லாது ஏனைய நாடுகளிலும் எமது வியாபார நடவடிக்கைகளை விஸ்தரிப்பதற்கான வாய்ப்பினை Huawei ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அத்தோடு, உள்ளூர் சந்தை தொடர்பான Huawei தரவுகளை அடிப்படையாகக் கொண்டு எமது அறிவுசார் சொத்துக்களின் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும் எம்மால் முடிகிறது.” 

Hello Kitty தீம்களைத் தொடர்ந்து Snoopy, Miffy மற்றும் ஏனைய ஜப்பானிய கேலிச்சித்திர கதாபாத்திரங்களையும் உலகெங்கிலுமுள்ள Huawei பயனாளர்களுக்கு இம்மாதமளவில் அறிமுகப்படுத்துவதற்கு அந்நிறுவனமானது எதிர்பார்க்கின்றது. அண்மைய தரவுகள் சீனாவுக்கு வெளியிலுள்ள HUAWEI தீம் ஸ்டோர்களிலிருந்து 280 மில்லியனுக்கும் மேற்பட்ட தரவிறக்கங்கள் வருடாந்தம் இடம்பெறுவதாகக் குறிப்பிடுகின்றன. இதுதவிர Microfun நிறுவனமும் Huawei மொபைல் சேவைகள் உடனான கூட்டு வியாபார நடவடிக்கைகளின் வாயிலாக உலகளாவிய ரீதியில் வியாபித்து வருகிறது. HUAWEI AppGallery இல் கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Jellipop Match கேமின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திலான தரவிறக்கங்கள் இரண்டு மாதங்களில் 10 மடங்கு அதிகரிப்பினைக் காண்பித்துள்ளது.

“Huawei நிறுவனத்தின் ‘விரிவான ஒத்துழைப்பு’மாதிரியானது மொபைல் கேம்களுக்கான தரவிறக்கங்கள் மற்றும் நாளாந்தம் உபயோகிக்கும் பயனாளர்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதற்கு வெகுவாகப் பங்களிக்கின்றது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சந்தைப்படுத்தல் உதவிகளை உள்ளடக்கிய இந்த மாதிரியானது AppGallery தளங்கள் மற்றும் ஏனைய Huawei தயாரிப்புகளின் வியாபார மேம்படுத்தல் நடவடிக்கைகளை வலுப்படுத்துகிறது,” என திரு. லூ கருத்துத்தெரிவித்தார். அத்தோடு, Jellipop Match ஆனது பேனர் விளம்பரங்கள், செயலி பரிந்துரைகள், திரையில் மின்னும் விளம்பரங்கள், HUAWEI உதவியாளர் விளம்பரங்கள் போன்றவற்றின் வாயிலாக பயனாளர்களுக்கு விளம்பரப்படுத்தப்படுகிறது. 

கேம்களுக்கான கொள்வனவுகளை ஊக்குவிக்கும் முகமாக, HUAWEI புள்ளிகள் மற்றும் ஸ்மார்ட் சாதனங்களைப் பரிசாக வழங்கும் ஆஃப்லைன் களியாட்ட நிகழ்வுகளையும் Huawei அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. “இந்த கூட்டு நடவடிக்கையானது இருதரப்பினருக்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இதன் மூலமான மேலதிக வருவாயானது AppGallery இன் அடுத்தகட்ட வியாபார மேம்படுத்தல் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கு பயன்படுகிறது. இதன் காரணமாக இரண்டு மாதங்களில் Jellipop Match இரண்டு நாள் பயன்பாட்டு விகிதமானது ஏனைய கேம்களுடன் ஒப்பிடுகையில் 4 மடங்காக அதிகரித்துள்ளது.” என திரு. லூ மேலும் குறிப்பிட்டார். 

AppGallery, தீம்கள், வீடியோ, இசை, HUAWEI Pay மற்றும் Huawei உதவியாளர் போன்ற டிஜிட்டல் சேவைகளை உள்ளடக்கிய Huawei மொபைல் சேவைகளை 170 நாடுகளிலுள்ள 530 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனாளர்கள் உபயோகித்து வருகின்றனர். மேம்பாட்டாளர்கள் மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்கள் https://developer.huawei.com/consumer/en/ என்ற இணையப் பக்கத்திற்கு விஜயம் செய்து சலுகைகள் மற்றும் உதவி தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். 


capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்