CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

நைலோன் நூல் இறக்குமதி மோசடி -வடகடல் தலைவரின் ஊழல் தொடர்பில் விசாரணை தொடர்கின்றது

நைலோன் நூல் இறக்குமதி மோசடி -வடகடல் தலைவரின் ஊழல் தொடர்பில் விசாரணை தொடர்கின்றது

அரச நிதியை மோசடி செய்தமை குறித்து , வட கடல் நிறுவனம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார்

வடகடல் நிறுவனம், தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்குகின்து

இதற்கமைய, குறித்த நிறுவனத்தின் கீழ் லுனுவில, வீரவில மற்றும் யாழ்ப்பாணம் குருநகர் பகுதிகளில் மூன்று மீன்பிடி வலை தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில், குறித்த மீன்பிடி வலைகளைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, உரிய விலைமனு கோரலின்றி தரக் குறைவான நைலோன் நூலை இந்திய நிறுனமொன்றின் ஊடாக இறக்குமதி செய்ததன் மூலம், அரச நிதியை மோசடி செய்ததாக வட கடல் நிறுவனத்தின் தலைவர் எஸ்.ரி பரமேஸ்வரன் மீது ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது,

அத்துடன் ,குறித்த நைலோன் நூல் கொழும்பு துறைமுகத்தினூடாக கொண்டுவரப்பட்டதை அடுத்து, அவை வடகடல் நிறுவனத் தலைவரின் கீழ் இயங்கும் போக்குவரத்து சேவை நிறுவமொன்றின் மூலம் யாழ்ப்பாணத்திலுள்ள வடகடல் நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

இதனையடுத்து அங்கிருந்து குறித்த நூல் தொகை வீரவில மற்றும் லுனுவில நிறுவனங்களுக்கும் எடுத்து செல்லப்பட்டுள்ளது

இதன்போது ,போக்குவரத்துக்காக,அமைச்சின் வாகனங்கள் இருக்கின்ற போதிலும் வடகடல் நிறுவனத்தின் தலைவர் எஸ் ரி பரமேஸ்வரன் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தமது சொந்த வாகனங்கள் மூலம் அவற்றை கொண்டுசென்று அதற்கான நிதியையும் அரசாங்கத்திடமிருந்து அறவிட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன், வலைத் தயாரிப்புக்காக டொரே (TORAY) மற்றும் V.T.F போன்ற உயர்தரத்துடனான நூலை இறக்குமதி செய்ய முடிந்த போதிலும், வட கடல் நிறுவனம், குறைந்த தரத்திலான நூலையே இறக்குமதி செய்துள்ளதாகவும், இதுதொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது

இதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் கடந்த 30 ஆம் திகதி வட கடல் நிறுவனத்தின் தலைவர் எஸ்.ரி பரமேஸ்வரன், அதன் பொது முகாமையாளர் மற்றும் கணக்கதிகாரி ஆகியோரிடம்   ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது

மேலும் குறித்த விடயம் தொடர்பில் வாக்குமூலமொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக, மட்டக்களப்பு, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்து

இந்த நிலையில்,மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் எமது கெப்பிடல் நியூசுக்கு குறிப்பிட்டது

இதேவேளை, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை மாவட்ட செயலாளர்கள் நாளை மறுதினம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது


capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்