CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

 ஓம் நமோ பகவதே வாசுதேவாயா. கிருஷ்ணரின் அருள் பார்வை நம் மீது படும்!

ஓம் நமோ பகவதே வாசுதேவாயா. கிருஷ்ணரின் அருள் பார்வை நம் மீது படும்!

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

மகா விஷ்ணுவின் ஒன்பதாகவது அவதாரம் கிருஷ்ணாவதாரம். அதுவே கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மகிழ்ச்சி  என்பது மனதில்தான் இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்தியவர் கிருஷ்ணர். நாம் என்னவாக இருக்கிறோமோ அதன் படியே நமக்கு காட்சி தருபவர்தான்  கிருஷ்ணர்.

கிருஷ்ணர் பிறந்த தினம் அஷ்டமி. கிருஷ்ண ஜெயந்தி அன்று, அவருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக  அலங்கரித்தும் கிருஷ்ணரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, குழந்தையின் கால் பாதங்களை வரைந்தும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

கிருஷ்ணர் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால் பூசைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று  கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூசையறை வரை இடப்படுகின்றது.

கிருஷ்ணரை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்மசீலராக வாழ்வார்கள். அரசியல் வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.

கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் மக்கள்  விரதம் இருந்து நள்ளிரவில் பூஜை முடிந்தவுடன் பிரசாதம் அல்லது மறுநாள் காலை தயிர், வெண்ணெய்,  பால் போன்றவற்றை உண்டு விரதத்தை முடிப்பது வழக்கம்.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்