CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

திருமணம் என்பது மனித சமுதாயத்தால் ஏற்படுத்தப்பட்ட வாழ்வியல் பந்தம்....

திருமணம் என்பது மனித சமுதாயத்தால் ஏற்படுத்தப்பட்ட வாழ்வியல் பந்தம்....

இரு மனங்களின் சங்கமம், வாழ்வின் தொடக்கத்திலிருந்து, அதாவது பந்தம் ஏற்பட்ட நாளிலிருந்து, வாழ்நாள் இறுதிவரை நீடிக்கும் பந்தம், அடுத்த  தலைமுறைக்கான பிணைப்புச் சங்கிலி எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.

திருமணம் என்பது இரு மனங்கள் இணைவது மட்டுமல்லாமல், இரு வேறு குடும்பங்கள், சில சமயங்களில் இரு வேறு கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் கொண்ட  குடும்பங்கள் இணையும் விழாவாகும். 

மனிதனிடம் அன்பு, கருணை, பாசம் போன்ற நற்பண்புகளை வளர்க்கும் குடும்பம் என்ற பந்தத்தை உருவாக்கும் பண்பட்ட ஒரு நிகழ்வுதான் திருமணம். இரு மனங்களின்  கனவை நிறைவேற்றும் பொறுப்பைப் பெற்றோரும், குடும்பத்தின் பெரியவர்களும் மனமுவந்து மகிழ்ச்சியுடனும் ஈடுபாட்டுடனும் செய்கின்றனர்.

ஏனெனில், இது அவர்களது தலையாயக் கடமையும் கூட. மேலும், இறைவனின் ஆசியுடன் இது நடப்பதால், இது ஆயிரங்காலத்துப் பயிர் எனப் பெரியோர்களால்  போற்றப்படுகிறது.

இல்லறம் என்ற நல்லறத்தை, இறைவன் மற்றும் பெரியோர் ஆசியுடன் தொடங்கும் தொடக்கப்புள்ளியாக, அற்புதமான தருணத்துடன் தொடங்குவதே திருமணம். 

ஏழேழு ஜென்மத்துக்கும் தொடரும் பந்தமாக அறியப்பட்ட இந்த உறவு முறை, இந்த ஒரு ஜென்மத்திலேயே வெகு விரைவில் முடிவுக்கு வந்துவிடுகிறது. அது பெற்றோர்  பார்த்து நிச்சயித்து நடத்திய திருமணமாக இருந்தாலும் சரி, காதல் திருமணமாக இருந்தாலும் சரி.

காலம், காலமாகச் சொல்லப்படும் அர்த்தங்களை ஆராயாமல், வெறும் சடங்குகளாகவும், சம்பிரதாயங்களை நிறைவேற்றும் விழாவாகவும் நடத்தப்பட்டு, பண்பாடு பின்னுக்குத்  தள்ளப்பட்டு இன்று வெற்றுப் பெயர் மட்டும் நிலைத்திருக்கிறது. 

இத்தகைய சூழல், திருமணம் செய்யும் தம்பதிகளை மட்டுமல்லாது, வருங்காலத் தலைமுறையின்  தரத்தையும் சேர்த்து பாதிக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய உண்மை ஆகும்.

திருமணத்துக்கு முன்பே, ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் திருமணப்  பொருத்தம் பார்த்து, திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கையில் ஏற்படப்போகும்  பிரச்னைகளைக் கண்டறிந்து அதைச் சரிசெய்து திருமணம் செய்துகொண்டால், அது ஆயிரம் காலத்துப் பயிராக இருக்கும் என்பது நிச்சயம்.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்