CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

இலங்கையில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் இரும்பு பெண்!

இலங்கையில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் இரும்பு பெண்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக பிரதி சொலிசிஸ்டர் நாயகம் டில்ருக்‌ஷி டயஸ் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல ஆங்கில ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தமது பிரதி சொலிசிஸ்டர் நாயகம் பதவியில் இருந்து நேற்று முன்தினம் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளராக டில்ருக்‌ஷி டயஸ் பதவி வகித்ததோடு, அவரது காலப்பகுதியிலேயே கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பாக அதிகளவான வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

இதனால் இவரை இரும்புப்பெண் எனவும் பலரும் அழைத்தனர்.

இந்த நிலையில், இலங்கை மாற்று அணியின் ஜனாதிபதி வேட்பாளராக டில்ருக்‌ஷி டயஸ் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்