CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

பதவி விலகல் முடிவை மீளப் பெற்றார் இரும்புப் பெண்மணி டில்ருக்‌ஷி டயஸ்...!

பதவி விலகல் முடிவை மீளப் பெற்றார் இரும்புப் பெண்மணி டில்ருக்‌ஷி டயஸ்...!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரதி சொலிசிஸ்டர் நாயகம் பதவியிலிருந்து விலகத் திட்டமிட்டிருந்ததாக கூறப்படும் டில்ருக்‌ஷி டயஸ்  தமது பதவி விலகல் முடிவினை மீளப் பெற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல ஆங்கில ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, பிரதி சொலிசிஸ்டர் நாயகம்  தமது பதவியில் இருந்து கடந்த செவ்வாய் கிழமை விலகுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், தமது சேவைக்காலம் முடிவடைவதற்கு முன்னர்  விலகிச்செல்வதை அனுமதிக்குமாறு சட்டமா அதிபரிடம் அவர்  கோரியிருந்ததாக கூறப்பட்டது. 

எனினும் குறித்த பதவி விலகற் கடிதம் பொது சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பப்படுவதற்கு முன்பே, கோரிக்கை மீளப்பெறப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத் தகவல்களை மேற்கோள் காட்டி, குறித்த ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்கும் ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றிய டில்ருக்‌ஷி டயஸ், 2016 ஆம் ஆண்டு தமது பதவியை இராஜினாமா செய்திருந்ததன் பின்னர் பிரதி சொலிசிஸ்டர் நாயகமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்