CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

ஜனாதிபதி ஆணைக்குழு  முன்னிலையில் அகில விராஜ்

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அகில விராஜ்

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

கல்வி அமைச்சின் வௌியீட்டுத் திணைக்களப் பணிப்பாளராகக் கடமைாற்றும் I.M.K.B. இலங்கசிங்கவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று விசாரணை தொடர்பில் சாட்சியம் வழங்குவதற்காக அமைச்சர் இன்று முன்னிலையாகவுள்ளார்.

அநீதி இழைக்கும்  நோக்கில் கல்வி அமைச்சரினால் தமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கசிங்க, ஜனாதிபதி ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டிற்கு அமையவே, அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அந்த ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

பாடசாலைப் புத்தகங்களில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் நிழற்படம் அச்சிடப்பட்டமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது வாக்குமூலம் வழங்கிய I.M.K.B. இலங்கசிங்கவுக்கு இடமாற்றம் வழங்குவதற்கு  கல்வி அமைச்சரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, I.M.K.B. இலங்கசிங்கவுக்கு மீண்டும் கல்வி அமைச்சின் வௌியீட்டுத் திணைக்களப் பணிப்பாளர் பதவி வழங்க வேண்டும் என, ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், கல்வி அமைச்சினால் I.M.K.B. இலங்கசிங்கவுக்கு எதிராக மீண்டும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்