CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல் நீடிப்பு

பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல் நீடிப்பு

காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வென்னப்புவ பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் துலக்‌ஷி பெர்ணாண்டோ மற்றும் அவரின்சகோதரி ஆகியோர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய அவர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாரவில நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த மாதம்19 ஆம் திகதி வாகன அனுமதிப் பத்திரமின்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த வென்னப்புவ பிரதேசசபை உறுப்பினரின் சகோதரியை, காவல்துறையினர் இடைநிறுத்தி விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து,குறித்த பெண், தனது சகோதரியான  வென்னப்புவ பிரதேசசபை உறுப்பினர் துலக்‌ஷி பெர்ணாண்டோவையும் அழைத்து, காவல்துறையினருக்கு எதிராக தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி முறையற்றவிதத்தில் உரையாடியுள்ளனர்.

இந்த நிலையில்,காவல்துறையினரின் கடமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் செயற்பட்ட வீடியோகாட்சியொன்று நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்டதையடுத்து, அவர்களைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்