CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

இரணைமடுக்குள விசாரணைக்கு என்ன ஆனது?

இரணைமடுக்குள விசாரணைக்கு என்ன ஆனது?

இரணைமடுக்குள விசாரணை அறிக்கை தொடர்பில், வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என விமர்சிக்கப்பட்டுள்ளது.

மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் செயலாளர் நாயகம் கணேஸ்வரன் வேலாயுதத்தினால், ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு எழுதப்பட்ட கடிதத்திலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரணைமடுக்குள வெள்ளத்தினால் ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பில் வடமாகாண ஆளுநரினால் விசாரணை குழு நியமிக்கப்பட்டதுடன், முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அறிக்கையும்  ஜூன் மாதம் 29 ஆம் திகதி அன்று தமக்குக் கிடைக்கப் பெற்றதாக, வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்திருந்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில் தவறுகளும் ஊழல்களும் இடம்பெற்றுள்ளதாக  வடமாகாண ஆளுநர் குறிப்பிட்டதாகவும், கணேஸ்வரன் வேலாயுதம், ஜனாதிபதிக்கான தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

எனினும், அவ்வாறான ஊழலில் ஈடுபட்டோருக்கான  தண்டனைகள் எவையும் வழங்கப்படவில்லையென மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் செயலாளர் நாயகம் கணேஸ்வரன் வேலாயுதம் சுட்டிக்காட்டியுள்ளார்.


capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்