CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

தடை செய்யப்பட்ட பொலித்தீன் உற்பத்தி - நிறுவனத்தின் மீது நடவடிக்கை

தடை செய்யப்பட்ட பொலித்தீன் உற்பத்தி - நிறுவனத்தின் மீது நடவடிக்கை

பொரலஸ்கமுவ - திவுலப்பிட்டிய பகுதியில், தடை செய்யப்பட்ட பொலித்தீன்களை உற்பத்திசெய்த நிறுவனமொன்று மீது சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான தடை செய்யப்பட்ட மூன்று டொன் பொலித்தீன்கைப்பற்றப்பட்டுள்ளது.மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமையவே, இந்த சுற்றிவளைப்புநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தடை செய்யபட்ட L.D.P.E. பொலிதீன் வகைகள் மற்றும் கல்சியத்தைப் பயன்படுத்தி மக்களின்உடலிற்கு  பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்படும்பொலிதீன் வகைகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

இரசாயன உற்பத்தி அனுமதிப்பத்திரமின்றி, வர்த்தகப் பதிவுச் சான்றிதல் மற்றும்வர்த்தக அனுமதிப் பத்திரம் ஆகியவற்றை மாத்திரமே பயன்படுத்தி குறித்த தொழிற்சாலை நடத்திச்செல்லப்பட்டுள்ளதாக, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், சில சட்டங்களை மீறிச் செயற்பட்டமைக்காக, குறித்த நிறுவனத்திற்கு எதிராககங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில், மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் வழக்கும் தொடரப்பட்டுள்ளதுமேலும், கைப்பற்றப்பட்ட பொலித்தீன் அனைத்தும் நீதவானின் உத்தரவுக்கமைய தொம்பெகுப்பை மேட்டுப் பகுதியில், கொட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்