CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

கட்டுநாயக்க விமானநிலையத்தில் பயணிகள் நெரிசல்

கட்டுநாயக்க விமானநிலையத்தில் பயணிகள் நெரிசல்

இலங்கையில் நடைபெற்ற போரா மாநாட்டில்கலந்துகொண்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்களின் சொந்த நாடுகளுக்குதிரும்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் திரண்டதை அடுத்து, விமான நிலையத்தில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் 31 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 9 ஆம் திகதிவரை பம்பலப்பிட்டியில் போரா மாநாடு நடைபெற்றது. 

இதன்பொருட்டு சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த 21ஆயிரத்துக்கும் அதிகமான போரா இனத்தவர்கள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். மாநாடு நிறைவில் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பிச்செல்வதற்காக போரா இனத்தவர்கள் விமான நிலையத்தில் திரண்டு வருவதால், இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக எமது விமான நிலையசெய்தியாளர் கூறினார்.

ஆரம்ப காலத்தில் ஆறு இலட்சம் பயணிகளுக்கு வசதிகளைஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டபோதிலும், தற்போது சுமார் 12 இலட்சம் பயணிகள் விமான நிலையம்ஊடாக பயணிப்பதாக விமான நிலைய குடிவரவு - குடியகல்வு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். பயணிகளின் வருகைக்கு ஏற்றவாறு விமான நிலையத்தின் வசதிகள்மேம்படுத்தப்படவில்லை என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.


capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்