CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

 கோட்டாவின் மேன்முறையீடு நிராகரிப்பு

கோட்டாவின் மேன்முறையீடு நிராகரிப்பு

டி.ஏ. ராஜபக்ஸ ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணப் பணிகளுக்காக 33 தசம் 9 மில்லியன் ரூபா நிதியை மோசடி செய்ததாக சட்ட மாஅதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை நிராகரிக்குமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

அருங்காட்சியக நிர்மாணப் பணிகளுக்காக காணி நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 33 தசம் 9 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக சட்ட மாஅதிபரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் பிழைகள் உள்ளதால் குற்றப்பத்திரிகையை நிராகரிக்குமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உயர்நீதிமன்றத்திடம் மேன்முறையீட்டுக் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த மேன்முறையீட்டை பரிசீலணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம், அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளது. 

உயர்நீதிமன்றத்தின் சிசிர டிஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரி.பி. தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் கோட்டாபய ராஜபக்ஸவின் மேன்முறையீடு இன்று பரிசீலிக்கப்பட்டது. 

கோட்டாபய ராஜபக்ஸவின் மேன்முறையீட்டு கோரிக்கையை நிராகரிப்பதாக அறிவித்த ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் தலைவரான சிசிர டிஆப்ரூ, ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் பெரும்பான்மை உறுப்பினர்களின் இணக்கத்துடன் மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுக்காமல் நிராகரிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் அளவிற்கு, அதில் நியாயமான மற்றும் சட்ட ரீதியான அடிப்படைக் காரணிகள் இல்லையெனவும் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் தலைவர் மேலும் அறிவித்துள்ளார்.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்