CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

 பொலன்னறுவைக்கான கடுகதி ரயில் சேவையை ஆரம்பித்தார் ஜனாதிபதி

பொலன்னறுவைக்கான கடுகதி ரயில் சேவையை ஆரம்பித்தார் ஜனாதிபதி

கொழும்பு கோட்டையில் இருந்து பொலன்னறுவை வரையில் பயணிக்கும் "புலதிசி" கடுகதி ரயில் போக்குவரத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று ஆரம்பித்து வைத்தார்.

புலதிசி கடுகதி ரயில் இன்று பிற்பகல் தனது பயணத்தை ஆரம்பித்தது.

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து, மருதானை ரயில் நிலையம் வரை ரயிலில் பயணத்தை மேற்கொண்டு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ரயில் சேவையை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, அமைச்சர் அர்ஜுண ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க ஆகியோர் இந்த நிகழ்வில் ஜனாதிபதியுடன் கலந்துகொண்டனர்.

தினமும் பிற்பகல் 3 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் புலதிசி கடுகதி ரயில், இரவு 7.45 க்கு பொலன்னறுவையை சென்றடையும்.

மறுநாள் அதிகாலை 3.45 க்கு பொலன்னறுவையில் இருந்து மீண்டும் புறப்பட்டு முற்பகல் 9.06 க்கு கோட்டை ரயில் நிலையத்தை இந்த ரயில் வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரயில் சேவைக்கு புதிதாக இணைக்கப்பட்டுள்ள புலதிசி நகர் சேர் கடுகதி ரயில் எஸ் - 13 ரக அதிநவீன சொகுசு ரயிலாகும்.

கொழும்பு கோட்டை மற்றும் பொலன்னறுவை நகரங்களுக்கு இடையிலான விசேட ரயில் சேவை கடந்த பல வருடங்களாக இடம்பெறவில்லை என்பதுடன், அந்த குறையை நிவர்த்திக்கும் வகையில் ஜனாதிபதியின் முயற்சியினால் இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

புதிய ரயில் சேவையை ஆரம்பித்து வைத்த பின்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து உள்ளிட்ட பிரமுகர்கள், மருதானை ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறையையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.


capitalnews.lk

capitalnews.lk
capitalnews.lk
capitalnews.lk
capitalnews.lk
capitalnews.lk
capitalnews.lk

முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்