CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

தேசிய பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை தாமதப்படுத்தக் கூடாது - ஜனாதிபதி

தேசிய பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை தாமதப்படுத்தக் கூடாது - ஜனாதிபதி

தேசிய பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்களை ஒருபோதும் தாமதப்படுத்தக்கூடாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன், பயங்கரவாதத்தை தடுப்பதற்கான சட்டத் திருத்தங்கள் மற்றும் புதிய சட்டங்களை வகுப்பதை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற பாதுகாப்பு மேற்பார்வை குழுவின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு கூட்டத்தின்போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர் பாதுகாப்பு பற்றிய மேற்பார்வை குழு கூட்டத்தில் பங்குபற்றிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

ஏப்ரல் 21 ஆம் திகதி நாடு எதிர்நோக்கிய துன்பியல் சம்பவம் மீண்டும் ஏற்படுவதற்கு இடமளிக்காதிருப்பதற்கு அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்துரைத்த ஜனாதிபதி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நாடாளுமன்ற தெரிவிக்குழு முன்னிலையில் பங்குபற்றவோ அல்லது பங்குபற்றாமல் இருப்பதற்கோ தமது விருப்பின் பிரகாரம் செயற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக சட்ட மாஅதிபர் தனக்கு அறிவித்திருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

எனினும், தேசிய பாதுகாப்பின் முக்கியத்துவம் கருதி, ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையில் அதுகுறித்து தாம் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றினால் சில முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

அந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தி தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் புதிய சட்டங்களை உருவாக்குதல் தொடர்பாக கண்டறியும் பொறுப்பை பாதுகாப்பு பற்றிய மேற்பார்வை குழுவிடம் ஜனாதிபதி இதன்போது ஒப்படைத்தார்.

தேசிய பாதுகாப்பை முதன்மைப்படுத்திய குடிவரவு - குடியகல்வு செயற்பாடுகள், பயங்கரவாதத்திற்கு நிதி உதவியளித்தல், இணையத்தின் ஊடான பிரகடனங்கள், பொய் பிரசாரங்கள், சைபர் பாதுகாப்பு, கற்கை முறைகள் உள்ளிட்ட பல துறைகளைச் சார்ந்த 15 பிரிவுகளின் கீழ் விடயங்களை கண்டறிந்து விரைவாக இந்த குழுவினால் நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, டக்ளஸ் தேவானந்தா, தயாசிறி ஜயசேகர, லசந்த அழகியவன்ன, அஜித் பீ. பெரேரா, ஆஷு மாரசிங்க, பாதுகாப்பு செயலாளர், முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு பிரதானிகள் பலரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்