CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

வடக்கில் ஜனாதிபதிக்கு கூடுதல் ஆதரவு - கருத்துக் கணிப்பில் தகவல்

வடக்கில் ஜனாதிபதிக்கு கூடுதல் ஆதரவு - கருத்துக் கணிப்பில் தகவல்

போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டை கொண்டுள்ள   ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு வடக்கு மக்கள் ஆதரவளித்துள்ளனர்.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டை கொண்டுள்ள   ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவின் தீர்மானம் தொடர்பில் டிஜிட்டல் தொழிநுட்பத்தினூடாக மக்கள் கருத்துக் கணிப்பொன்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற Enterprises Sri Lanka கண்காட்சி வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

அதில் பங்குபற்றிய இருபதாயிர்து ,634 பேரில் 94.89% சதவீதத்தினர் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு சார்பாக வாக்களித்துள்ளனர்.

யாழ் மாவட்டம் முழுவதும் பரவியுள்ள சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம் காரணமாகபிள்ளைகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் அதிக அழுத்தங்களுக்குஉள்ளாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.,

இதேவேளை  போதைப்பொருள் வியாபாரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த விடயம் தொடர்பில் எந்தவொரு அரச தலைவரும் மேற்கொள்ளாத வகையில் தீர்மானங்களை மேற்கொண்டு அதிக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஜனாதிபதியின்  செயற்பாடுகளை  வடக்கு மக்கள் பாராட்டியுள்ளனர்.

அத்துடன் தமது பிள்ளைகளை நேசிக்கும் அனைத்து மக்களும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக அணிதிரள வேண்டும் என பொதுமக்கள்இதன் போது வலியுறுத்தியுள்ளனர்.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்