CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் டோகோ ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் டோகோ ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கும் டோகோ அரசாங்கத்திற்குமிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை விரிவுபடுத்துதல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள டோகோ ஜனாதிபதி  எசோசிம்னா க்னாசிங்பே (Faure Essozimna Gnassingbe) ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவை  சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில்  நேற்று இரவு இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

டோகோ ஜனாதிபதியின் இலங்கைக்கான விஜயம் இருநாடுகளுக்குமிடையே பொருளாதார, வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகள் மேம்படுவதற்கு ஏதுவாக அமையுமென ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்..

இலங்கை முதலீட்டாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் டோகோ நாட்டிலுள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காக தாம் அழைப்பு விடுப்பதாகவும் குறிப்பாக ஆடை உற்பத்தி துறை சார்ந்த வியாபாரிகளுக்கு கூடிய முதலீட்டு வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாளை மறுதினம்  தமது நாட்டில் ஆரம்பமாகவுள்ள சர்வதேச பயங்கரவாதம் பற்றிய சம்மேளனத்தில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் இலங்கை பெற்றுக்கொண்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் தெளிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் டோகோ ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முன்னணி இலங்கை வர்த்தகர்களுடன் இன்று சந்திப்பொன்றில் கலந்துகொள்ளவுள்ளதாக  டோகோ ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பினை தொடர்ந்து  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  டோகோ ஜனாதிபதிக்கு விசேட நினைவுப் பரிசொன்றையும் வழங்கியுள்ளார்.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்