நாட்டின் ஆசிரியர்களில் 10 சதவீதமானவர்கள் அந்த சேவைக்கு பொருத்தமற்றவர்கள்
- By Capital News --
- 18 Sep 2019
- 97
நாட்டில் ஆசிரியர் சேவையிலுள்ள சுமார் 10 சதவீதமானவர்கள் அந்த சேவைக்கு பொருத்தமற்றவர்கள் எனஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஆசிரியர் சேவையிலுள்ள சுமார் இரண்டு லட்சத்து 80ஆயிரம் பேரில்சுமார் 10 சதவீதமானவர்கள் ஆசிரியர் சேவைக்கு பொருத்தமற்றவர்கள் என்பதுகல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
வடமேல் மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு குருணாகல் வெலகெதரவிளையாட்டரங்கில் இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டுஉரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் ஆயிரத்து 400 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டதுடன்,100 பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி வழங்கிவைத்தார்.
இதேவேளை தற்கால ஆசிரியர்கள் சிறந்த ஆக்கத்திறனை கொண்டவர்களாகவும் ஆளுமை உள்ளவர்களாகவும்இருக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
கற்பித்தல் நடவடிக்கை மாத்திரமின்றி பாடசாலையின் மாணவர்கள் தொடர்பிலானபொறுப்பும் ஆசிரியர்களுக்கு உள்ளதென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேலும்தெரிவித்துள்ளார்.