CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மீதான வழக்கை விசாரிக்க நீதவான் நீதிமன்றுக்கு தடை..

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மீதான வழக்கை விசாரிக்க நீதவான் நீதிமன்றுக்கு தடை..

கடந்த அரசாங்க காலப்பகுதியில் சதொச நிறுவன ஊழியர்கள் 153 பேரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதால் அரசாங்கத்திற்கு நான்கு கோடி ரூபா இழப்பை ஏற்படுத்தியதாக குற்றஞ் சுமத்தப்பட்டுமுன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மீது நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தவழக்கை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால், முனனாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குஎதிராக  இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவினால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை ஆராய்ந்த பின்னர்,கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகேயினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் 9 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 

சதொச நிறுவன ஊழியர்கள் 153 பேரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதால் அரசாங்கத்திற்குநான்கு கோடி ரூபா இழப்பை ஏற்படுத்தியதாக தன்மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளதுடன், அதுதொடர்பாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்கு பதிவுசெய்திருப்பதாகமுன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மீளாய்வு மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த வழக்கு தொடரப்பட்டுள்ள விதம் சட்டத்திற்கு முரணானது எனக் குறிப்பிட்டு தனதுசட்டத்தரணிகள் ஊடாக அடிப்படை விரோதத்தை தாக்கல் செய்திருந்த போதிலும், அதனை நிராகரித்தகொழும்பு நீதவான் நீதிமன்றம் வழக்கை தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு தீர்மானித்திருப்பதாகவும்அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீதவான் நீதிமன்றத்தின் இந்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என அறிவிப்பதுடன்,குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை விடுவித்து விடுதலை செய்யுமாறும் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோகொழும்பு மேல் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்