CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

பிக்பாஸ் நேரடி வலைப்பக்கம் (Bigg Boss Live Blog)

பிக்பாஸ் நேரடி வலைப்பக்கம் (Bigg Boss Live Blog)

பிக்பாஸ் குறித்த தகவல்களை உடனுக்குடன் இந்த பதிவு மூலம் அறிந்து கொள்ளலாம். கெப்பிட்டலுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்... 

11.00 PM - பிரம்மாண்டமாக நடைபெற்று வந்த BIGG BOSS SEASON 3 இன் வெற்றியாளராக முகேன் ராவ் தெரிவு செய்யப்பட்டார்.

சாண்டி, முகென், லோஸ்லியா, ஷெரின் ஆகிய 4 போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர்.

இவர்களில் நான்காது இடத்தை  தட்டிக் கொண்டு,ஷெரின் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

அடுத்ததாக, நடிகை ஸ்ருதி ஹாசன் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து  லொஸ்லியபவை பிக் பாஸ் வீட்டிலிருந்து அழைத்து வந்தார். 

பிக் பாஸ் வீட்டின் மின் விளக்குகளை அணைத்துவிட்டு மேடைக்கு வருமாறு,முகேனயும்,சாண்டியையும், தொகுப்பாளர் கமல் அழைத்தார்.

இப்போ...என்ன வெற்றியாளர் அறிவிக்கப்பட்டார்..அது வேற யாருமல்ல முகேன் ராவ் தான்..

இரண்டாவது இடத்தை சாண்டி மாஸ்டர் தட்டிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

09.03 PM - பிக்பொஸ் நிகழ்ச்சியில் மக்கள் மனங்களை வென்ற தர்ஷனுக்கு ராஜ்கமல் பிலிம் இன்டர்நெஷனல் நிறுவனத்தின் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்பினை கமலஹாசன் வழங்கியுள்ளார் 

இந்த நிலையில் தான் இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொள்வேன் என தர்ஷன் தெரிவித்துள்ளார். இதை கேட்ட தர்ஷனின் அம்மா ஆனந்தத்தில் அழுது விடுகிறார். 

07.34 PM - போட்டியாளர்களுக்கு வெற்றிக் கிண்ணத்தை அறிமுகப்படுத்தினார் ரித்விகா. ஷெரின் நான்காம் இடம் பெற்று முதலில் வெளியேறியுள்ளார். 

06.56 PM - முகேன் பாடிய ஒரு பாடலை போட்டுக்காட்டி அவரை பிக்பொஸ் அழவைத்துள்ளார். இதன்போது முகேன் தன்னிடம் அதிகமாக விரும்பிக்கேட்ட ஒரு விடயமாக இந்த பாடலை பிக்பொஸ் கொடுத்தார். இதனைப் பார்த்த முகேன் அழுத்து நன்றி தெரிவித்துள்ளார். 

06.45  PM - பிக்பொஸ் வீட்டுக்குள் உள்ள போட்டியாளர்கள் நான்கு பேரையும் நேரில் பார்த்த கமலஹாசன் அவர்களுக்கு ஒரு பரிசை வழங்கினார். அதாவது அவர்கள் நால்வர் தொடர்பாகவும் கவிதை எழுதி கொடுத்துள்ளார். குறிப்பாக அவரே எழுதி, அவரே வாசித்தமை சிறப்பு அம்சமாகும்.

06.28 PM - சாண்டியின் லாலாவை பார்த்த பிறகு தனது கணவனுக்கும் தனக்குமான உறவில் நெருக்கம் கூடியுள்ளதாக நிகழ்ச்சியை பார்க்க வந்த ஒரு தாய் கூறுகின்றார்.

தன்னுடைய கணவன் மாலுமியாக தொழில் செய்து வருவதினால் சில மாதங்கள் குடும்பத்தை பிரிந்து இருப்பார். அந்த காலப்பகுதியில் தன்னுடைய மகன் அவரை தேடியதில்லை. ஆனால் தற்போது அவரை பிரிவதில்லை. இந்த அன்பை செண்டி - லாலாவை கண்டு தான் புரிந்துக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

06.22  PM - போட்டியாளர்கள் கமலை வரவேற்று அழைத்துச் செல்கின்றனர். 

06.15  PM - பிக்பாஸ் போட்டியாளர்களை சந்திக்க வீட்டுக்குள் செல்கிறார் கமல். 

06.10 PM - மக்களுடன் உரையாடி அனுபங்களைப் பகிர்கிறார் கமல். 

06.07 PM - எனினும் லொஸ்லியா வெற்றிபெறுவார் என இலங்கை மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

இலங்கையர்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமா? 

06.05 PM - ஷெரின்,லொஸ்லியா மற்றும் முகேன் ஆகியோர் களத்தில் உள்ளனர் 

தற்போதைய வாக்கு நிலவரங்களின் படி முகேன் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

06.03 PM - 16 பேருடன் ஆரம்பமாகிய இந்த நிகழ்ச்சி இறுதி மேடையில் இன்று 4 பேருடன் பயணிக்கிறது இதில் யாருக்கு வெற்றி யார் கையில் வெற்றிக்கிண்ணம் என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும். 

06.00 PM - பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் 

04.40 PM - இறுதிப் போட்டிக்கு 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மட்டுமே...

03.54 PM - பிக்பாஸ் வீட்டில் உள்ள 8 பேர் என்னை மிகவும் கஷ்டப்படுத்தியதாக குறிப்பிட்டு காணொளி ஒன்றை மதுமிதா வெளியிட்டுள்ளதாக தகவல். 

03.48 PM - பிக்பாஸ் இறுதிப் போட்டிக்கு வெளியேறிய போட்டியாளர்கள் வருகை. 

03.28 PM - நேற்றும் இன்றும் கிடைத்திருக்கும் வாக்குகளை வைத்து பார்க்கும் போது சாண்டிக்கு லொஸ்லியாவை விட அதிக வாக்குகள் கிடைத்திருப்பதாக தகவல். 

03.20 PM - பிக்பாஸில் இன்று முகேன் மற்றும் லொஸ்லியா ஆகியோருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 

உங்கள் ஆதரவு யாருக்கு?

03:07 PM - இன்னும் மூன்று மணித்தியாலங்கள் மட்டுமே உள்ளன. 

பிக்பாஸ் தமிழ் மூன்றாவது பருவத்தின் இறுதிப் போட்டி இன்று மாலை ஆறு மணி முதல் இடம்பெறவுள்ளது. 

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்