கோட்டாவுக்கே ஆதரவு - SLFP அறிவிப்பு
- By Capital News --
- 09 Oct 2019
- 233
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு, ஆதரவு வழங்கப் போவதாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகச் சந்திப்பின் போதே, நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் ஶ்ரீபால டி சில்வாவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இன்றைய ஊடகச் சந்திப்பில் கருத்துரைத்த, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.