CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

ரயில்சேவைத் பணிப்புறக்கணிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்?

ரயில்சேவைத் பணிப்புறக்கணிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்?

ரயில்சேவைத்துறையினரின் பணிப்புறக்கணிப்பு காரணமாக, தொலைதூரப் பயணங்களுக்காக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டினைப் பெற்றிருந்தவர்களுக்கு அந்தக் கட்டணம் திருப்பியளிக்கப்படவுள்ளது.

இந்தத் தகவலை ரயில்சேவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தொலைதூரப் பயணங்களுக்காக கட்டணம் செலுத்தி ரயில் பயணச்சீட்டுகளைப் பெற்றுக் கொண்ட போதும், பணிப்புறக்கணிப்பு இடம்பெற்ற காலத்தில் அந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியாதவர்கள் இன்று முதல் தமது கட்டணத்திற்கான தொகையை பெற்றுக் கொள்ள முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ரயில்சேவைத்துறையினரின் அண்மைய பணிப்புறக்கணிப்பினால், 160 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்சேவைத் திணைக்களத்தின் பொது முகாமையாளர் திலந்த ஃபெர்னான்டோ இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்தப் பணிப்புறக்கணிப்பு காரணமாக, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளின் பயணத்திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ரயில் நிலையங்களுக்குச் சென்று தமக்கான கட்டண மீளளிப்பினைப் பெறமுடியுமெனக் குறிப்பிட்டுள்ளார்.


capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்