CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

சீன ஜனாதிபதியின் இந்திய விஜயம் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு

சீன ஜனாதிபதியின் இந்திய விஜயம் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு

சீன ஜனாதிபதியின் இந்திய விஜயம் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை, இந்தியாவின் வெளியுறவுத்துறைக்குப் பொறுப்பான அமைச்சு, இன்றைய தினம் வெளியிட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் சீன ஜனாதிபதி Xi Jinping இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள சீன ஜனாதிபதியை தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தில் வைத்து சந்திக்கவுள்ளார்.

இதன் போது மாமல்லபுரத்தின் புராதனச் சின்னங்களை சீன ஜனாதிபதி Xi Jinping பார்வையிடவுள்ளமை காரணமாக, அந்தப் பகுதியின் முக்கிய இடங்களில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்திய மத்திய காவல் துறையினரும், தமிழ்நாடு மாநிலக் காவல்துறையினரும் மாமல்லபுரத்தில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், சீன ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்திற்குச் செல்வதற்கு எதிர்வரும் 13 ஆம் திகதி வரை சுற்றுலாப்பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்