CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

 சந்திரகுப்த, காமினி வியங்கொட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

சந்திரகுப்த, காமினி வியங்கொட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

உயிர்  அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறி, பேராசிரியர் சந்திரகுப்த மற்றும் புரவெசிபலய அமைப்பின் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் காமினி வியங்கொட ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் இலங்கைக் பிரஜாவுரிமையை சவாலுக்குட்படுத்தி மனுத்தாக்கல் செய்யப்பட்ட பின்னர், தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறியே,  இந்த முறைப்பாடு  அவர்களால் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இந்த விடயம் குறித்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாய்மூலம் முறைப்பாடு செய்ததாகவும், பின்னர் அது குறித்து எழுத்துமூலம் முறைப்பாடு செய்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வழக்கு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், தொடர்ந்தும் தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டு வந்த குரோதப் பேச்சுக்கள், மற்றும் அச்சுறுத்தல்கள் என்பன குறைவடையும் என தாம் எதிர்பார்த்ததாகவும், எனினும் அவ்வாறு இடம்பெறாததன் காரணமாகவே முறைப்பாடு பதிவு செய்ததாகவும் பேராசிரியர் சந்திரகுப்த மற்றும் புரவெசிபலய அமைப்பின் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் காமினி வியங்கொட ஆகியோர் மேலும் கூறியுள்ளனர்  


capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்