CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

வடக்கின் வாக்குகளுக்காகவே பலாலியில் சர்வதேச விமான நிலையம் -  நாமல் ராஜபக்ஷ

வடக்கின் வாக்குகளுக்காகவே பலாலியில் சர்வதேச விமான நிலையம் - நாமல் ராஜபக்ஷ

வடக்கு மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே   பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்படுவதாக  விமர்சிக்கப்பட்டுள்ளது.

இந்த விமர்சனத்தை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டைப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், அவர் இதனைக் கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில், நாட்டில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதனை நல்லாட்சி  அரசாங்கம் விமர்சித்துவருவதாகவும் நாமல் ராஜபக்ஷ   குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், மஹிந்த அரசாங்கத்தை விமர்சித்தவர்கள், தற்போது வடக்கு மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக  யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ  மேலும் தெரிவித்துள்ளார்.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்