CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

சிறைச்சாலை விதிகளை  மீறிய சசிகலா நடராஜன்

சிறைச்சாலை விதிகளை மீறிய சசிகலா நடராஜன்

இந்தியா - பெங்களூருவில் அமைந்துள்ள பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா நடராஜன் அந்த சிறைச்சாலை விதிகளை மீறியதாக வெளியான தகவல்கள் உண்மையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் ஆகியோர் சிறை விதிமுறைகளை மீறி, சட்டவிரோதமாக சலுகைகளைப் பெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்தக் குற்றச்சாட்டினை சிறைச்சாலை அதிகாரிகள் மறுத்திருந்தனர்.

எனினும், இது குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணைக்குழு, தனது விசாரணை அறிக்கையை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கர்நாடக மாநில அரசிடம் சமர்ப்பித்திருந்தது.

குறித்த அறிக்கை கடந்த ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட போதும் அதன் விபரங்கள் எவையும் வெளிவராமலிருந்த நிலையிலேயே, அந்த அறிக்கையில் உள்ள தற்போது சசிகலாவின் சிறைச்சாலை விதிமீறல் குறித்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்