CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

ஹேமசிறி பெர்னாண்டோ,பூஜித் ஜயசுந்தரவுக்கு விளக்கமறியல்

ஹேமசிறி பெர்னாண்டோ,பூஜித் ஜயசுந்தரவுக்கு விளக்கமறியல்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள காவல் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த பிணை அனுமதியை இரத்து செய்து கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனையடுத்து ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டது.

இதன் பின்னர் பிரதிவாதிகள் இருவரும் கொழும்ப பிரதம நீதவான் லங்கா ஜயரத்னவிடம் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இவர்கள் தொடர்பாக இன்று முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராய்ந்த பிரதம நீதவான், மேல் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் இருவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிட்டார்.


capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்