CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும்  ரோஹித போகொல்லாகம

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் ரோஹித போகொல்லாகம

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரோஹித போகொல்லாகம புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவின் பிரசார நடவடிக்கைகளுக்கான பிரதானியும், ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க கொழும்பில் இன்று நத்திய ஊடக சந்திப்பில் இதுகுறித்து அறிவிக்கப்பட்டது.

இந்த ஊடக சந்திப்பில் முன்னாள் ஆளுநரும், முன்னாள் வௌிவிவகார அமைச்சருமான ரோஹித போகொல்லாகம பிரசன்னமாகியிருந்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு தாம் ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டினார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நன்கு ஆராய்ந்த பின்னரே தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் கீழ், 2010 ஆம் ஆண்டு வரை தன்னால் சர்வதேசத்திடம் இருந்து கிடைக்கப்பெற்ற நன்மைகளை இலங்கை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருந்ததாகவும் அவர் இதன்போது கூறினார்.

எனினும், சமகால விடயங்களுடன் ஒப்பிடுகையில் எதிர்காலத்தில் நாட்டை சிறந்தவாறு வழிநடத்துவதற்கான இயலுமை சஜித் பிரேமதாசவுக்கு இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக பகிரங்க அறிவிப்பு விடுத்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினரான டபிள்யூ. பி. ஏக்கநாயக்க, இன்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்