CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

பழைய கடன்களை திருப்பி செலுத்தும் நிலை உருவாகும் - (10-10-2019)

பழைய கடன்களை திருப்பி செலுத்தும் நிலை உருவாகும் - (10-10-2019)

மேஷம்

இன்று பிள்ளைகளிடம் பாசம் அதிகரிக்கும். பெற்றோர்கள் - உறவினர்களின் அரவணைப்பு அதிகமாகும். பெண்களுக்கு பயணங்களில் எதிர்பாராத தடங்கல் உண்டாகலாம். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன்தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை. அதிர்ஷ்ட எண்: 5, 9.

ரிஷபம்

இன்று புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம்  காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட நினைப்பவர்கள் அதற்கான ஆலோசனைகளில் ஈடுபடுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள். அதிர்ஷ்ட எண்: 1, 5.

மிதுனம்

இன்று வேலை விஷயமாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள். வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாக  பேசுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை. அதிர்ஷ்ட எண்: 1, 3

கடகம்

இன்று முக்கிய நபரின் அறிமுகமும், உதவியும்  கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். மரியாதை கூடும். திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம். அதிர்ஷ்ட எண்: 2, 6.

சிம்மம்

இன்று பயணங்கள் செல்லும் போது கவனம் தேவை. சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை உண்டாகலாம். பெண்களுக்கு எதிலும் தயக்கம் காட்டாமல் துணிச்சலாக காரியங்களை செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை. அதிர்ஷ்ட எண்கள்: 2, 7.

கன்னி

இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடக்கும். பணவரத்தும் அதிகரிக்கும். பழைய கடன்களை திருப்பி செலுத்தக் கூடிய நிலை உருவாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம். அதிர்ஷ்ட எண்: 3, 5

துலாம்

இன்று அரசாங்க அனுகூலம் ஏற்படும். வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும்.  பிள்ளைகளால் நன்மை கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள். அதிர்ஷ்ட எண்: 2, 9 

விருச்சிகம்

இன்று நல்ல நாள். பிரச்சினைகளிலிருந்து விடுபடக்கூடிய நேரம். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள். காரிய தீர்வு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு. அதிர்ஷ்ட எண்: 1, 3.

தனுசு

இன்று பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். பலரை திருப்தி படுத்த நீங்கள் பாடுபடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நல்ல அன்யோன்யம் இருக்கும். வெற்றியுடன் செயல்படுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம். அதிர்ஷ்ட எண்: 5, 7.

மகரம்

இன்று எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். நினைத்த வசதிகள் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். மனதெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும். வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை. அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9.

கும்பம்

இன்று ஆன்மிக எண்ணம் உண்டாகும். தொழில் வியாபாரம் நல்லநிலைக்கு உயரும். போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையான நிதியுதவி கிடைக்கும். மேலிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண். அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மீனம்

இன்று வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடைதாமதம் ஏற்படும். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள். அதிர்ஷ்ட எண்கள்: 3, 9.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்