CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

நாட்டின் அடுத்த ஜனாதிபதி சஜித் - நவின் தெரிவிப்பு

நாட்டின் அடுத்த ஜனாதிபதி சஜித் - நவின் தெரிவிப்பு

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக சஜித் பிரேமதாஸவே தெரிவு செய்யப்படுவார் என அமைச்சர் நவின் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலில் இன்று பிற்பகல் இடம்பெற்ற தேசிய ஜனநாயக முன்னணியின் பிரசார பொதுக் கூட்டத்தில் கருத்துரைத்த போதே, அமைச்சர் நவின் திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

">

இதேவேளை முன்னைய அரசாங்கத்திலேயே பெண்களுக்கு எதிரான முறைகேடுகள் இடம்பெற்றதாக அமைச்சர் சந்ராணி பண்டார இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்திலேயே பெண்களுக்கென இடம் ஒதுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் வெளிநாட்டிலிருந்து சுற்றுலாவுக்காக இலங்கைக்கு வந்த பெண்கள் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் சந்ராணி பண்டார குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் முன்னைய அரசாங்கத்தின் காலத்தில், தற்போது போன்று சுயாதீனமான நீதித்துறை காணப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை அமைத்த பின்னரே நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு, சுதந்திரம் என பல விடயங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் சந்ராணி பண்டார  சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளுக்காக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக பிரதமர் ரணில்விக்ரமசிங்க இதன்போது குறிப்பிட்டார்.

">

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்