CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

 மலேசியாவில் LTTE ஆதரவாளர்கள் கைது?

மலேசியாவில் LTTE ஆதரவாளர்கள் கைது?

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மலேசியாவில் வைத்து அந்த நாட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் மீது, விசாரணைகளை முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழீழ விடுதலைப் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் கொடுப்பதற்கு திட்டமிட்ட குற்றச்சாட்டிலேயே, அந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதன் போது கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் மலேசியாவின் குடியுரிமையைப் பெற்றவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த சந்தேக நபர்களின் செயற்பாடுகள், மலேசிய காவல்துறையினால் அவதானிக்கப்பட்டு வந்துள்ள நிலையிலேயே, இந்தக் கைது நடவடிக்கை மலேசிய காவல்துறையால் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த கைது நடவடிக்கைக்கு உள்ளாகிய இரண்டு பேர், மலேசியாவின் அரசியற் கட்சியொன்றின் உறுப்பினர்களென அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்