CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சர் மீது கத்திக்குத்து - வயிற்றில் காயம்!

இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சர் மீது கத்திக்குத்து - வயிற்றில் காயம்!

கத்திக்குத்துத் தாக்குதலுக்கு உள்ளான இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சர் விரன்ட்டோ (Wiranto)  தற்போது வைத்தியசாலையில் படிப்படியாக குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் பன்டென் மாகாணத்தில் இடம்பெற்ற பொது நிகழ்வொன்றுக்குச் சென்று விட்டு மீண்டும் தனது வாகனத்தில் ஏற முயன்ற போதே, அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்த தாக்குதலின் போது, அமைச்சரின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான இந்தோனேசிய காவல்துறை உத்தியோகத்தர், இந்தோனேசிய இராணுவ அதிகாரி மற்றும் உதவியாளர் ஆகியோரும் காயமடைந்தனர்.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் இந்த கத்திக் குத்து தாக்குதலின் காரணமாக, இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சர் விரன்ட்டோவின் வயிற்றுப் பகுதியில் இரண்டு காயங்கள் ஏற்பட்டிருந்தன.

எனினும் உடனடியாக விரன்ட்டோவை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டமை காரணமாக, தற்போது அவருடைய உடல்நிலை தேறி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்