CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் எதிர்வரும் ஆறாம் திகதிக்குள் நிறைவடையும்

வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் எதிர்வரும் ஆறாம் திகதிக்குள் நிறைவடையும்

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் எதிர்வரும் ஆறாம் திகதிக்குள் நிறைவடையும் என அரசாங்க அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரச அச்சக திணைக்களத்தின் தலைவர் கங்காணி லியனகே இதனை  தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் 90 சதவீதம்   பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினரின்  பாதுகாப்பிற்கு மத்தியில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அகரவரிசைப்படி முறைப்படுத்தி, தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரச அச்சக திணைக்களத்திடம் கையளித்திருந்தது.

இதற்கமைய, ஒரு கோடியே 70 இலட்சம் உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்படவுள்ளன.

இதேவேளை ஜனாதிபதி  தேர்தலுக்கான வாக்களிப்பு பெட்டிகளை  உள்ளுர்  உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்