CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

ஆழ்துளைக் கிணற்றில் சுஜித்; மீட்புப் பணியில் தொடரும் தாமதம்

ஆழ்துளைக் கிணற்றில் சுஜித்; மீட்புப் பணியில் தொடரும் தாமதம்

இந்தியாவின் தமிழக மாநிலத்தில் உள்ள திருச்சியில்,ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன் சுஜித்தை மீட்கும் பணிகள்  60 மணித்தியாலங்களாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

குறித்த ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கியுள்ள சுஜித் என்ற குழந்தையை மீட்பதற்காக பாரிய இயந்திரம் மூலம் துளையிடும் பணிகள் நேற்று காலை ஆரம்பமாகின. 

குழந்தை சிக்கியுள்ள கிணற்றுக்கு சரியாக 3 மீற்றர் தூரத்தில், ஒரு மீற்றர் அகலமுடைய கிணற்றை 90 அடிக்கு தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

எனினும், நேற்று காலை 7 மணிக்கு ஆரம்பமான இந்த நடவடிக்கையின் மூலம் சுமார் 40 அடி வரை மட்டுமே தற்போது கிணறு தோண்டப்பட்டுள்ளது. 

நேற்றைய தினம் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இயந்திரம் 35 அடி வரை மட்டுமே தோண்டியதுடன், கடினமான பாறைகள் இருந்ததால் அந்த இயந்திரத்தால் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியயவில்லை. 

இதன் காரணமாக, அதனை விட பாரிய புதிய இயந்திரம் ஒன்று கொண்டுவரப்பட்டது. 

இந்த இயந்திரம் முன்னைய இயந்திரத்தை விட விரைவாக செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இருந்தபோதிலும் புதிய இயந்திரமும் பழுதடைந்து பல மணி நேரம் மீட்புப் பணிகள் தாமதமாகின. 

இதனை அடுத்து, புதிய இயந்திரம் சரி செய்யப்பட்டு மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

தற்போது, சுஜித் எனும் குறித்த குழந்தை ஆழ்துளைக் கிணற்றின் 88 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதுடன், இரண்டு நாட்களாக உணவு இல்லாததன் காரணமாக, மயக்க நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்