CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

நியூசிலாந்து அணியை 76 ஓட்டங்களால் வீழ்த்தியது இங்கிலாந்து

நியூசிலாந்து அணியை 76 ஓட்டங்களால் வீழ்த்தியது இங்கிலாந்து

நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது  இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 76 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பில்  ஈடுபட  தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய  இங்கிலாந்துஅணி நி0ர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 3 விக்கட்களை இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

துடுப்பாட்டத்தில்   இங்கிலாந்து அணியின், டேவிட்மாலன் 103 ஓட்டங்களையும், இயன் மோர்கன் (Eoin Morgan) 91 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.

 பந்துவீச்சில்  நியூசிலாந்து அணியின் மிட்சல் சன்ட்னர் 2 விக்கட்களையும் டிம் சௌதி  ஒரு விக்கட்டையும் வீழ்த்தினார்கள்.

தொடந்து 242 என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, 16 தசம் 5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து, 165 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் அந்த அணியின் டிம் சௌதி   39 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் மெட் பார்கின்சன் அபாரமாக பந்து வீசி நான்கு விக்கட்களை வீழ்த்தினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக டேவிட்மாலன்  தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்