CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் இன்று

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் இன்று

இலங்கையில் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான எட்டாவது ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறவுள்ளது

ஜனாதிபதி  தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன்  ஒரு கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 96 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன், வாக்களிப்பு நடவடிக்கைகளுக்காக நாடாளாவிய ரீதியில் 12 ஆயிரத்து 845 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நாடுதழுவிய ரீதியில் 60 ஆயிரத்து 175 காவல்துறை உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதேவேளை, எண்ணாயிரத்து 80 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காவல்துறை சிரேஷ்ட அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று நடைபெறவுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் ஆயிரத்து 178 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

அத்துடன் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகளுக்காக 371 வாக்கு எண்ணும் நிலையங்கள்  அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்களிப்பு நடவடிக்கைகளுக்காக 12 ஆயிரத்து 854  வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ள நிலையில் அவற்றில் 12 ஆயிரத்து 350 பெட்டிகள், கார்ட்போர்ட் பெட்டிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன்  ஒப்பிடுகையில், இந்த முறை  47,606 வாக்காளர்கள்  அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 266 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகைதந்துள்ளதாக  தேர்தல்கள் ஆணைககுழு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய நாடுகள் உள்ளிட்ட பலநாடுகளில் இருந்து  கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகைதந்துள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கைகளுக்காக ஆயிரத்து 175 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபரும், தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான சுனில் கண்ணங்கரா தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில், ஆயிரத்து 184 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட அரசாங்க அதிபரும், தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான சுனில் ஜயலத் கூறியுள்ளார்

இதேவேளை, கண்டி மாவட்டத்தில் 835 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட அரசாங்க அதிபரும், தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான திஸ்ஸ கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

குருநாகல் மாவட்டத்தில் தொள்ளாயிரத்து 56 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்ட அரசாங்க அதிபரும், தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான காமினி இலங்கரத்ன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக ஏழாயிரத்து 100 அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான நாகலிங்கம் வேதநாயகம் குறிப்பிட்டார்.

">

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் 100 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும், தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான சுந்தரம் அருமைநாயகம் கூறினார்.

">

முல்லைதீவுமாவட்டத்தில், 75 ஆயிரத்து 381 பேருக்கான வாக்கெடுப்புக்காக 135 வாக்கெடுப்பு  நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு,  தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஆயிரத்து 806 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக  முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

">

வவுனியா மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 333 பேர் வாக்களிக்கவுள்ள நிலையில் 142 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தில், வாக்களிப்பு நடவடிக்கைகளுக்காக 76 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும், தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான C.A.மோகன்ராஸ் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் 5 லட்சத்து 69 ஆயிரத்து 28 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், வாக்களிப்பதற்காக 488 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபரும்,தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான எம்.பீ.ஆர்.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்டத்தில் சுமார் ஆறு லட்சத்து 57 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 23 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அரசாங்க அதிபரும்,தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான தமயந்தி பரணகம குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அங்கீகரிக்கப்பட்ட தேசிய அடையாள அட்டை, அங்கீகரிக்கப்பட்ட வாகன அனுமதிப்பத்திரம், செல்லுபடியான கடவுச்சீட்டு, ஓய்வூதிய அல்லது முதியோருக்கான அடையாள அட்டை அல்லது மதகுருமாருக்கான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு, மாலை 5 மணிக்கு முடிவடையவுள்ளது.

இந்த நிலையில், வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லும் போது, தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ள ஆவணங்களை எடுத்து செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்