அமைச்சரவையில் டக்ளஸ்! அங்கஜன் வேண்டுகோள்!
- By Capital News --
- 20 Nov 2019
- 1567
புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அங்கம் வகிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
வட மாகாணத் தமிழ்மக்களை புதிய அமைச்சரவையில் பிரதிநிதித்துவப் படுத்துமாறு அங்கஜன் இராமநாதன், டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத் தக்கது.