சைக்கோ பட பாடலுக்கு பிரபலங்கள் பலர் பாராட்டு...!
- By Capital News --
- 28 Nov 2019
- 113
சைக்கோ படத்தின் ‘உன்ன நெனச்சு’ பாடல் வைரலாகி வரும் நிலையில், அதற்கு பிரபலங்கள் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
வாட்ச்மேன் படத்துக்கு பிறகு அருண்மொழி மாணிக்கம் தயாரிக்கும் படம் சைக்கோ.
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ளார்.
மேலும் அதிதிராவ், நித்யா மேனன், ராம், சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மிஷ்கினின் ‘நந்தலாலா’, ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆகியப் படங்களுக்குப் பிறகு ‘சைக்கோ’ படத்துக்கு இசையமைக்கிறார் இசைஞானி இளையராஜா.
மிஷ்கினுடன் முதன் முறையாக கைகோர்த்திருக்கும் உதயநிதி, இந்தப் படத்தில் பார்வையற்றவராக நடிக்கிறார்.
இந்நிலையில், இந்தப் படத்தில் முதல் சிங்கிள் ட்ராக்கான ‘உன்ன நெனச்சு’ என்ற பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடியிருக்கிறார்.
இளையராஜாவின் இசையில் அவர் பாடியுள்ள முதல் பாடலும் இதுதான்