CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

விவசாயிகளுக்கான எதிர்காலம் உதயமாகியுள்ளது - அங்கஜன்

விவசாயிகளுக்கான எதிர்காலம் உதயமாகியுள்ளது - அங்கஜன்

விவசாயிகளுக்கு சிறந்த ஒரு காலம் தற்போது  கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - உடுவில் பிரதேச கமநலசேவை நிலையத்திற்குட்பட்ட  உருளைக்கிழங்குச்  செய்கையாளர்களுக்கான  விதை உருளைக்கிழங்குகள் இன்று  வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே,  அங்கஜன் இராமநாதன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு தொடர்ச்சியாக விவசாயிகளின் நலன்கருதி விதை உருளைக்கிழங்கு, வழங்கப்பட்டு வருவதையும், நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தேர்தல் காலத்திலும் இவ'வாறு விதை உருளைக்கிழங்கு மானியம் வழங்கப்பட்ட போதிலும், தான் அதில் இருந்து ஒதுங்கி இருந்ததாகவும் அங்கஜன் இராமநாதன் கூறியுள்ளார்.

வாக்குகளைப் பெறும் நோக்கத்திற்காக தாம் இதனை முன்னெடுத்திருப்பதாக ஒரு தோற்றப்பாடு ஏற்பட கூடும் என்பதற்காகவே, தாம் அவ்வாறு ஒதுங்கி இருந்ததாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததன் பிறகு, விவசாயிகளுக்கு நல்லதொரு எதிர்காலத்திற்கான ஆரம்பம் தற்போது ஏற்ப்பட்டுள்ளதாகவும் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இடத்தில் சிறுபான்மையினர் இல்லாத நிலையில் இருந்தாலும், அவர்களுக்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விவசாயத்தையும், உள்ளுர் உற்பத்திகளை அதிகரிப்பதற்கும் கொள்கை கொண்டுள்ளதோடு, அதற்கு தேவையான வளத்தை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

">

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்