CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அபார வெற்றி...!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அபார வெற்றி...!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. 

இந்த போட்டி அவுஸ்திரேலியாவின் Adelaide மைதானத்தில் நடைபெற்றது. 

தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி அபாரமாக விளையாடி, 3 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து, 589 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடிய டேவிட் வோர்னர் (David Warner) ஆட்டமிழக்காது 335 ஓட்டங்களையும், மார்னஸ் லபுஸ்சக்னி (Marnus Labuschagne) 162 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். 

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 302 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 

யசிர் ஷா (Yasir Shah) 113 ஓட்டங்களையும் பாபர் அஸாம் (Babar Azam) 97 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். 

அவுஸ்திரேலிய அணி சார்பாக, மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc) 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

தொடர்ந்து, தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 239 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. 

அவுஸ்திரேலிய அணி சார்பாக சிறப்பாகப் பந்து வீசிய நெதன் லயன் (Nathan Lyon) 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதன் மூலம் அவுஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 48 ஓட்டங்களால் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2 க்கு 0 என கைப்பற்றியது. 

முன்னதாக இந்த இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரையும் 2 க்கு 0 என அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. 

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்