இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் நியூஸிலாந்து முன்னிலை
- By Capital News --
- 03 Dec 2019
- 89
இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டி, நியூஸிலாந்தின் Hamilton இல் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில், தமது முதலாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 375 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டிருந்தது.
டொம் லெதம் (Tom Latham) 105 ஓட்டங்களையும், டெரில் மிட்செல் (Daryl Mitchell) 73 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இங்கிலாந்து அணி சார்பாக, ஸ்டுவர்ட் ப்ரோட் (Stuart Broad) 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்த நிலையில், தனது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 476 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
ரோரி பர்ன்ஸ் (Rory Burns) 101 ஓட்டங்களையும், ஜோ ரூட் (Joe Root) 226 ஓட்டங்களையும் குவித்தனர்.
இதனை அடுத்து, தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து அணி, சற்று முன்னர் வரை, 2 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 110 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கிறது.