CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

நாட்டின் சீரற்ற வானிலை - மக்களே அவதானம்...!

நாட்டின் சீரற்ற வானிலை - மக்களே அவதானம்...!

நாட்டில் நிலவும், சீரற்ற வானிலையானது தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  

இதன்படி, வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இவ்வாறு மழையுடனான வானிலை தொடருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைதீவு, நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, அநுராதபுரம், பொலன்னறுவை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகால்லை, இரத்தினபுரி, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களில் 75 முதல் 100 மில்லி மீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால், மலைப்பாங்கான மற்றும் மலையக பகுதிகளில் மண்சரிவு, மண்மேடு சரிந்து விழும் அபாயம் காணப்படுவதோடு, நிலம் தாழ் இறங்குதல், மரங்கள்முறிந்து விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் ஏற்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 

இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

இதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பிரதேச செயலக பிரிவிற்கும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பன பிரதேச செயலக பிரிவிற்கும் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது. 

அத்தோடு, பதுளை, கண்டி, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய நான்கு  மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த  மண்சரிவு அபாய எச்சரிக்கை  தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. 

இரத்தினபுரி மாவட்டத்தின், கொலன்ன பிரதேச செயலாளர் பிரிவிற்கும், கண்டி மாவட்டத்தின், உடுநுவர, உடபலாத்த, பஹதஹேவாஹெட, கங்கவட்டகோரல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, பதுளை மாவட்டத்தின், ஹல்துமுல்ல, பஸ்ஸர, லுனுகல, எல்ல, ஹாலி - எல்ல, பதுளை, ஹப்புதலை, பண்டாரவளை, சொர்னாதோட்ட, ஊவாபரனகம மற்றும் வெலிமடை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நுவரெலியா மாவட்டத்தின், ஹங்குராங்கெத, நுவரெலியா, வலப்பன, ஹம்பகமுவகோரல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை மற்றும் இம்புல்பே ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் செம்மஞ்சல் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பிரதேச செயலக பிரிவுகளில் வாழும் மக்கள் மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கன மழைக்காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால், பதுளை - பஸ்ஸரை பிரதான வீதியின் போக்குவத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதன் காரணமாக இன்று மாலை தொடக்கம் பதுளை - பசறை - லுனுகல வீதியினை மூடுவதற்கும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், எல்ல - வெல்லவாய வீதியினை பயன்படுத்தும் சாரதிகள் குறைந்த வேகத்தில், வாகனத்தை செலுத்துவதோடு, கட்பாறைகள் சறிந்து விழுவது, மண்மேடு இடிந்து விழும் அனர்தங்கள் தொடர்பில்  அவதானத்துடன் செயற்படுமாறு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, நமுனுகுல - கனவரல்ல - மவுசாகல தோட்டத்தில் 41 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 150 பேர் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை காரணமாக வீடுகளில் இருந்து வெளி

கனவரல்ல இலக்கம் 02 தமிழ் வித்தியாலயத்தில்  தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுத்துவருகின்றார்.

பதுளை - பண்டாரவளை பிரதான வீதியில் உள்ள மோட்டார் வாகன திருத்தும் நிலையம் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. 

பண்டாரவளை தந்திரியா பகுதியில் அமைந்துள்ள மோட்டார் வாகன திருத்தும் நிலையத்தின் பின்புறத்தில் உள்ள மண்மேடே இவ்வாறு சரிந்து விழுந்துள்ளது. 

இந்த அனர்த்தம் காரணமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

எனினும் கடையில் இருந்த 18 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ள அதேவேளை, மண்மேடை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாக, 4ஆயிரத்து 300 குடும்பங்களை சேந்த, 14 ஆயிரத்து 447 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, சிரற்ற வானிலை காரணமாக , இதுவரையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், 9 வீடுகள் முழுமையாகவும், 270 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக  தெரியவந்துள்ளது.

அத்தோடு, 327 குடும்பங்களை சேர்ந்த, ஆயிரத்து 169 பேர் பாதிக்கப்பட்டு 21 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

சீரற்ற வானிலைதொடர்ந்தும் நீடிக்கின்ற நிலையில்,  மாவட்ட இடர் முகாமைத்துவ அலுவலர்கள் மற்றும் நீர்ப்பாசனத்திணைக்களம், பிரதேச செயலகங்கள் ஆகியவற்றின் அதிகாரிகள் அவதானிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இதேவேளை, கடற்படையினர், விமானப் படையினர், இராணுவத்தினர், விஷேட அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினர் ஆகியோரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

மழையுடனான வானிலை  காரணமாக 18 பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

இதனால், தாழ் நிலப்பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை தொர்பான மேலதிக தகவல்களுடன் இணைந்து கொள்கின்றார் வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின்

">

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்