CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

தமிழ் மக்கள் தம்மை கைவிட்டாலும், தாம் அவர்களை கைவிடப்போவதில்லை...!

தமிழ் மக்கள் தம்மை கைவிட்டாலும், தாம் அவர்களை கைவிடப்போவதில்லை...!

தமது ஆட்சியில்  தமிழில்  தேசிய கீதம் பாடுவதற்கு தடையில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தமிழிழில்  தேசியக் கீதம் இசைக்கக் கூடாது என தாம் ஒரு போதும் ஒரு கூறவில்லை என பிரதமர் மேலும் கூறினார்.

இன்று அலரி மாளிகையில் தமிழ் ஊடகங்களின் செய்தியாசிரியர்களை சந்தித்த போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டார்

தேசிய நிகழ்வுகளில் தமிழில் தேசியக் கீதம் பாடுவது தொடர்பில்  அரசாங்கம் இதுவரை இறுதித் தீர்மானமொன்றை மேற்கொள்ளவில்லை என அவர் கூறினார்.

அத்துடன் தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை உரிய அமைச்சிடம் கோரியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்,

அவை கிடைக்கப் பெற்றதன் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்  ஆராயப்படும் அதன் பின்னரே அவர்கள் தொடர்பான  இறுதிக் கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்படும் என பிரதமர் கூறினார்,

மேலும் ஜெனிவாவின் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான விவகாரத்தை தமது நட்பு நாடுகளுடன் இணைந்து எதிர்கொள்ளவுள்ளதாக அவர் கூறினார்,

எவ்வாறாயினும் இம்மாதம் மார்ச்சில் இடம்பெறவுள்ள அமர்வில் இலங்கைக்கு எவ்வித சவால்களும் இல்லையெனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இதேவேளை கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்திருந்தும் தமிழர்களுக்கு வாக்களித்த எவற்றையும் செய்யவில்லை எனவும்  அவர் கூறினார்.

ஆனால் தமது ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளே அங்கு காணப்பட்ட போதிலும் தமிழ் தமது அரசாங்கத்துக்கு வாக்களிக்க மறுதலித்து வருவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் மக்கள் தம்மை கைவிட்டாலும் தாம் ஒரு போதும் தமிழ் மக்களை கைவிடப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார்,

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்